எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தர்னா!

தனிநபர் விளை நிலங்களை அழித்து மிரட்டல் விடுத்து வருவதாக புகார் தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை விவசாயி தனது மனைவி மகனுடன் தர்னாவில் ஈடுபட்டார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 12:34 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: தனிநபர் விளை நிலங்களை அழித்து மிரட்டல் விடுத்து வருவதாக புகார் தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை விவசாயி தனது மனைவி மகனுடன் தர்னாவில் ஈடுபட்டார்.

முக்கூடல் மயிலப்பபுரம் கிராமம் பிரான்சிஸ் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் சம்பத் (49), திங்கள்கிழமை தனது மனைவி மெர்சி, மகன் சாலமோன்பாரதி ஆகியோருடன் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். விளை நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனைவி, மகனுடன் தர்னாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியது: ராதாபுரம் வட்டம், பழவூரில் பூர்வீக வீடு, நிலத்தை விற்றுவிட்டு முக்கூடலில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். இதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் எனது விவசாய நிலத்தை அழித்தும், விளை நிலத்திற்காக போடப்பட்ட இரும்பு வேலியை உடைத்து சேதப்படுத்துவது, வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தி வருகிறார்.

காவலுக்கான நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விடுகிறார். பயிர்களுக்கு பாதுகாப்பாக இரவில் தங்கும் எங்களை அவதூறாக பேசி, ஆயுதங்களை காட்டி மிரட்டல் விடுத்து வருகிறார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தார். நடவடிக்கை எடுக்குமாறு சேரன்மகாதேவி டி.எஸ்.பி. க்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.