பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு சென்ற பேருந்துகள் தடுத்து நிறுத்தம்

மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த.....

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 6:40 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: மந்தாரகுப்பத்தில் இருந்து நெய்வேலி நகரியத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுரங்க விரிவாகப் பணிக்காக என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தியது. இச்சாலைக்கு பதிலாக மாற்று வழியில் பாதை பொறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலையில் பேருந்துகள் மற்றும் வாகனகள் இயக்க வேண்டும் என்றும், பழைய சாலை மூடப்படும் என்றும் என்.எல்.சி நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, மந்தாரகுப்பம் பழைய பெட்ரோல் பங்க் அருகே இருந்த என்.எல்.சி அதிகாரிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஆனால், வர்க்ஷாப் கேட், ஆட்டோ கேட் உள்ளிட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.

பின்னர்,  அதிகாரிகள் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். பழைய சாலையில் வழக்கம் போன்று வாகனங்கள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.