எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பத்தமடை, கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பத்தமடை, கல்லிடைக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 6:25 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: பத்தமடை, கல்லிடைக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

சேரன்மகாதேவி - திருநெல்வேலி பிரதானச் சாலையில் பத்தமடையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பத்தமடை, கேசவசமுத்திரம் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி கீழ தைக்கால் தெரு ரஹ்மத் ஜூம்ஆ மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையினை இமாம் ஜெ. ராஜாமுகம்மது நடத்தினார். ஜமாத் துணைத் தலைவர் எஸ். சம்சுதீன், துணைச் செயலர் ஏ.எம். முகைதீன், பொருளாளர் மு. சாகுல்ஹூசேன், நி்ர்வாகிகள் உள்பட திரளாக கலந்து கொண்டனர்.

பெண்களும் இத்தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் ஜமாத் தலைவர் கே.எஸ். அப்துல்மஜித், இமாம் முஹிபுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் குர்பானி கொடுக்கப்பட்டது. பொட்டல்புதூர் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையினை இமாம் பி.ஷேக்மன்சூர்மிஸ்பாஹி நடத்தினார். ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம், முதலியார்பட்டி, ரவணசமுத்திரம், பள்ளக்கால்பொதுக்குடி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல் உள்பட பல்வேறு பகுதியில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.