கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராம்குமார் உடற்கூறு பரிசோதனை விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:38 am

DIN

ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உடற்கூறு பரிசோதனை செய்யும் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை  அனுமதிக்க வேண்டும் என்று, அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளின் அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், 3வது நீதிபதியின் கருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது

அவ்வாறு மூன்றாவது நீதிபதியாக இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இன்று மாலை தனது தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று மாலை அவர் வழங்கிய தீர்ப்பில் ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ்  மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம்தான் நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனை மருத்துவர் இதனை செய்யக் கூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.