பண்ருட்டியில் ரூ.10 லட்சம் செலவில் காந்தி மண்டபம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே காந்தி பூங்கா உள்ளது. இதில், சுமார் 5 அடி உயரம் உடையக் காந்தி சிலை 1950-வாக்கில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.


நெய்வேலி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே காந்தி பூங்கா உள்ளது. இதில், சுமார் 5 அடி உயரம் உடையக் காந்தி சிலை 1950-வாக்கில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. பராமரிப்பு இல்லாமல் மண்டபத்துடன் சாய்ந்த நிலையில் இருந்த காந்தி சிலையை பண்ருட்டி நகர நிர்வாகம் நேராக நிமிர்த்தி பூங்காவை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
காந்தி சிலையின் மேல் பூசப்பட்டிருந்த வர்ணத்தை அகற்றி புதிய வர்ணம் தீட்டுவதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலையில் மினுமினுப்பு ஏற்பட்டதால் நகரமன்ற தலைவர் சி.பன்னீர்செல்வம், ஆணையர் பெருமாள் ஆகியோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொற்கொல்லர்களை அழைத்து ஆய்வு செய்ததில் பஞ்சலோக சிலை என்றும், சுமார் 200 கிலோ எடையுள்ள காந்தி சிலையில் சுமார் 50 கிலோ தங்கம் கலந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் காந்தி சிலையை பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை நகராட்சியின் அவசர கூட்டம் நகரமன்ற தலைவர் பி.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், காந்தி சிலையை பாதுகாப்பு கருதி இரும்பு வேலி அமைப்பது, வெப் கேமரா பொருத்துவது, எச்சரிக்கை மணி அமைப்பது ஆகிய பாதுகாப்பு பணிகளை ரூ.10 லட்சம் செலவில் நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி சிலையின் பாதுகாப்புக்காக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...