சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர் தோனி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி சந்தித்துப் பேசினார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி சந்தித்துப் பேசினார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் ‘MS தோனி’ என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘MS தோனி’ படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொண்டார்.
பாலிவுட்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘MS தோனி’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியிருக்கிறது. இப்படம் தமிழிலும் வெளியாகிவிருக்கிறது. இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
அப்போது அவர் பேசும்போது, சென்னை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான ஒருஇடம். சென்னையில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் டெஸ்ட் விளையாட்டை தொடங்கினேன். நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். எத்தனையோ முறை சென்னை வந்திருக்கிறேன். ஆனால், இதுவரை அவரை பார்க்க முடியாமல் இருந்து வந்தது. இன்று மாலை அவரை சந்திக்க செல்கிறேன். அவரை சந்திக்கப் போவது எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.
அதன்பின்னர், ‘தோனி’ படக்குழுவினருடன் அவர் ரஜினி இல்லம் நோக்கி புறப்பட்டார் தோனி. ரஜினிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வாழ்த்து கூறினார் தோனி. பின்னர், தன்னுடைய பெயரில் உருவாகியுள்ள ‘எம்.எஸ்.தோனி’ படம் குறித்து ரஜினியிடம் பேசினார். ரஜினியும் அந்த படம் குறித்த தகவல்களை கிரிக்கெட் வீரர் தோனியிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...