பண்ருட்டி : குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசபாபதி (34). இவர் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் அருகே கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது குறித்து இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் என்பரை இந்த வழக்கில் தொடர்புடையவராக சந்தேகப்பட்ட நிலையில், ஓணாங்குப்பம் அருகே சகோதரி வீட்டில் மறைந்திருந்த போது குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் தவமணி சக்திவேலை இரவு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் வியாழக்கிழமை இரவு ரத்தினசபாபதி குடிப்பதற்கு சக்திவேலிடம் பணம் கேட்டதாகவும், சக்திவேல் பணம் கொடுக்காமல் ரத்தினசபாபதியின் தலை உள்ளிட்ட பகுதிகளில் பிளேடால் கிழித்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.