அரசியலில் 60 ஆண்டுகள், 13 தேர்தல்களில் தொடர் வெற்றி: புதிய சரித்திரம் படைத்தார் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
தொடர்ந்து 13 தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு முறை கூட தோல்வி அடையாமல், ஒரே கட்சியின் சார்பில் 60 ஆண்டுகளாக சட்டப்பேரவையின் எம்எல்ஏவாக இருந்து தனது அரசியல் வாழ்க்கையில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார் கருணாநிதி.
ஹிந்திக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்து அதன் வெற்றியைத் தொடர்ந்து அரசியல் கட்சியாக மாறிய திமுகவின் வேட்பாளராக 1957ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக, பேரவைக்குள் நுழைந்தார் கருணாநிதி.
1962ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதயிலும், 1967ல் சென்னை சைதாப்பேட்டையிலும், 1971, 1977, 1980களில் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1989ம் ஆண்டு துறைமுகத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். இதே தொகுதியில் 1991ம் ஆண்டும் போட்டியிட்டு வென்றார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 1996, 2001, 2006 என மூன்று முறை பேரவை சென்றார். மேலும், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கருணாநிதி புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்த கருணாநிதி, தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவைக் கண்ணியத்தை மீறியதில்லை.
தனது அரசியல் வாழ்க்கையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கருணாநிதியின் குரல், சட்டப்பேரவையில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பது ஸ்டாலின் சொன்னது போல திமுக தொண்டர்களின் விருப்பம் மட்டும் அல்ல, கட்சி வேறுபாடு இல்லாத தமிழக மக்களின், தமிழக அரசியல் ஆர்வலர்களின் விருப்பமும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...