டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரேஷன் அட்டைக்குக் காட்டுவோம் டாடா: வந்துவிட்டது ஸ்மார்ட் கார்டு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு மாற்றாக தமிழர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்டு கார்டு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:11 pm

தினமணி


சென்னை: தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு மாற்றாக தமிழர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்டு கார்டு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில், பொதுமக்களுக்கு இன்று காலை நடைபெற்ற விழாவில் ஸ்மார்ட் கார்டு வழங்கி, திட்டத்தை தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் நிறைவடையும் என்று கூறினார்.

சரி.. ஸ்மார்ட் கார்டு எப்படி இருக்கும், அது எப்படி செயல்படும், அதில் திருத்தம் மேற்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்மார்ட் கார்டின் முன்புறம் குடும்பத் தலைவரின் புகைப்படம் மற்றும் அவரது விவரங்கள் இடம்பெறும். முகவரி, கடையின் எண் ஆகியவையும் இருக்கும். பின்புறம், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஸ்மார்ட் கார்டில் இருக்கும் க்யூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்த பிறகு, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.

ஸ்மார்ட் கார்டில் குடும்பத் தலைவரின் மொபைல் எண் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்ய மொபைல் போன் எண்ணை பதிவு செய்திருத்தல் அவசியம்.

ஸ்மார்ட் கார்டில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை www.tnpds.gov என்ற இணையதளத்தின் மூலம் செய்து கொள்ளலாம். நேரடியாக இ-சேவை மையங்களிலும் திருத்தங்களை செய்யலாம்.

ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி ரேஷன் கடையில் என்ன பொருட்கள் வாங்கினாலும், குடும்பத் தலைவரின் மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வந்துவிடும்.

சென்னை ஆர்.கே.நகரில் ஸ்மார்ட் கார்டு விநியோகம் இப்போதைக்கு செய்யப்படாது. இடைத் தேர்தல் முடிந்ததும் அப்பகுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை, தற்போதிருக்கும் ரேஷன் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தி வந்த ரேஷன் அட்டைகளின் நிலை கிட்டத்தட்ட பரிதாபத்துக்குரியதாக இருந்தது. அதற்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது என்று பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.