ஆர்.கே.நகர் தேர்தல்: நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்
வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ..


புதுதில்லி: வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் காரணமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் இரு பிரிவுகளும் பணப்பபட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இரு அணிகளிடையே அடிக்கடி தகராறுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாநில தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...