சென்னை ஆர்.கே. நகர் காவல் உதவி ஆணையர்கள் மூவருக்கு காத்திருப்பு பட்டியல்: தேர்தல் ஆணையம் அதிரடி!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர்கள் மூன்று பேரை, காத்திருப்பு பட்டியலுக்கு ...


சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர்கள் மூன்று பேரை, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. அதன் கோரிக்கையை ஏற்று முதலில்சென்னை மாநகர் காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அந்த வரிசையில் இன்று திருவொற்றியூர் காவல்துறை உதவி ஆணையர் குமார், ராயபுரம் பகுதி ஸ்டீபன் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதி ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் காத்திருப்பு பட்டியலில் வைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனை ஏற்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் இன்று அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...