கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி: அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 5:55 am

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த தள்ளுபடி ஆணையானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும் அல்லாது ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பின் தலைவரான அய்யாக்கண்ணு மதுரை  உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லியில் போராட்டத்த்தில் ஈடுபட்டிருக்கும் அய்யாக்கண்ணு இந்த தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்த பொழுது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.