மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதும் விவகாரத்தில் திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

DIN

சென்னை: நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதும் விவகாரத்தில் திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தில்லி செல்லும் வழியில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.

தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அனைவரும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் சொல்லா விட்டாலும் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது.    

நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதும் விவகாரத்தில், அவ்வாறு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டதே திமுகவைச் சேர்ந்த முன்னாள்  மத்திய அமைச்சர் டி .ஆர்.பாலுதான். எனவே நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசி அழிப்பவர்கள் அதற்கு பதிலாக,  திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும்.

தற்பொழுது ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதனை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.