ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஜி.கே. வாசன் ஆதரவு
ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.


ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக(அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா), தேமுதிக, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, சிபிஎம், நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி ஆர்.கே நகரில் முகாமிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து மதுசூதனுக்கு ஆதரவு கோரினார்.
இதை ஏற்ற ஜி.கே. வாசன் ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும் மதுசூதனனுக்கு ஆதரவாக தமாகாவினர் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்வர் என்றும் நாளை மறுநாள் முதல் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து தானும் பிரசாரம் மேற்கொள்வேன் என்றும் ஜி.கே. வாசன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...