மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை: தமிழிசைக்கு தினகரன் கேள்வி

ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எப்படி தெரியும் என்று அம்மா அதிமுக கட்சி வேட்பாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN


சென்னை: ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எப்படி தெரியும் என்று அம்மா அதிமுக கட்சி வேட்பாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், என்னுடைய வெற்றி உறுதியாகிவிட்டதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த சோதனையின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன் என்றார்.

மேலும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாக தமிழிசை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைகள், ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆதாரங்கள் என்னென்ன என்பதை அவர் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.