கீதாலட்சுமி வீட்டில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறையினர் சோதனை
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


சென்னை: எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகள் உள்பட 55 இடங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், சில தமிழக அமைச்சர்களும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக ஓபிஎஸ் அணியினரும், திமுகவினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர்.
இதனால் அந்தப் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேரும், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்களும் சோதனை நடத்துவதற்காகச் சென்றனர். இதனால் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை இன்று காலை 4 மணியளவில் நிறைவு பெற்றது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றது என சோதனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...