

சென்னை: ஆர்.கே.நகரில் எப்பொழுது தேர்தல் நடந்தாலும் மீண்டும் நானே போட்டியிடுவேன் என்று அதிமுக துணைப்பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன், ஏப்ரல் 12-ஆம் தேதி நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது.
இந்நிலையில் அதிமுக துணைப்பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகை தந்தார். அங்கே கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னால் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் ஆர்.கே.நகரில் எப்பொழுது தேர்தல் நடந்தாலும் அதிமுக அம்மா அணி சார்பாக மீண்டும் நானே போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். தமிழகத்தில் விரைவில் பொது த்தேர்தல் வரும் என்று ஸ்டாலின் கூறுவது பற்றி கேட்ட கேள்விக்கு அவர் எப்பொழுது ஜோசியராக மாறினார் என்று தினகரன் கேட்டார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்று செய்திகள் வருவது பற்றி கேட்கப்பட்டதற்கு அவை எல்லாம் வெறும் வதந்தி என்று தினகரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.