7-ஆவது முறையாகத் தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி ஆனந்தக் கண்ணீர் உதிர்த்ததாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திரைப்படப் பாடலுக்காக 7-ஆவது முறையாகத் தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்துவை பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்திய அளவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் சாதிக்க முடியாத வகையில் வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழுக்கு கிடைத்திருக்கும் பெருமையாகும். எந்த விருது பெற்றாலும் கருணாநிதியிடம்தான் அவர் முதலில் கூறுவார். இப்போது 7-ஆவது முறையாக தேசிய விருது பெற்றபோதும் உடல்நலம் குன்றி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியைச் சந்தித்து, இந்த செய்தியை சொன்னார். கருணாநிதி சிரித்துக்கொண்டே ஆனந்தக் கண்ணீர் உதிர்த்தார். வைரமுத்துவுக்கு திமுக சார்பில் வாழ்த்துகள் என்றார். ஸ்டாலினுடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் சென்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரும் வைரமுத்துவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


