டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் சீர்குலைக்க வேண்டாம்

இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் பாஜக சீர்குலைக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் பாஜக சீர்குலைக்க வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே பாஜக தலைமையிலான நரேந்திரமோடி அரசு செய்து வருகிறது.
ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பு முயற்சிகளை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செய்கிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹிந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் ஹிந்தியில்தான் கொடுக்க வேண்டும் எனும் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் கிராமப்புற-ஏழை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கச் செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முனைப்புக் காட்டாத மத்திய அரசு, இந்தியில் உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? விமான நிலைய அறிவிப்புகள்,பத்திரிகை செய்திகள்-விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் ஹிந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிதிருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். ஆனால், ஹிந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
எனவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.