டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய குடும்ப அட்டைக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இணைய சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டை பெற வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:21 pm

DIN

தமிழக அரசு இணைய சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டை பெற வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் மூலம் இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலம் வருமானம், ஜாதி, இருப்பிடம், இறப்புச் சான்றுகள் என பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி ஆகியவற்றைச் செலுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது.
வரும் 24 முதல் சேவை: அரசு இணைய சேவை மையங்கள் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பொது மக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, வரும் 24-ஆம் தேதி முதல் அரசு இணைய சேவை மையங்கள் வாயிலாக புதிதாக குடும்ப அட்டை பெறவும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.