எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்: உயர் நீதிமன்றம்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அளித்திருந்த தளர்வை ரத்து செய்து முன்பு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2017, 10:46 am

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அளித்திருந்த தளர்வை ரத்து செய்து முன்பு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு ஒன்றினை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது:

விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த தமிழக அரசு மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க 2016-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தி : உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்ததாவது:

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக இந்த நீதிமன்றம் அளித்திருந்த தளர்வு ஆணை ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வரைவு சட்டத்தை தமிழக அரசு தயார் செய்யும் வரை, அந்த சட்டமானது தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் வரை இந்த தடை தொடரும்.

தளர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்கத்தினரின் வேண்டுகோள் தள்ளுபடி செய்யபப்டுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் நடக்காத பொழுது என் தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.