சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்கிறார்கள்: ஓபிஎஸ் அணி மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்!

அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

DIN

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்று ஓபிஎஸ் அணி மீது அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில்  அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தனக்கு பிறகும் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் நிலைத்து வாழ வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். அதற்காகவே தற்பொழுது நிலவி வரும் சிக்கலை தீர்த்து கட்சியையும் சின்னத்தையும் அடைய முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காணலாம்.   

ஆனால் தற்பொழுது அந்த அணியின் கே.பி.முனுசாமி பேசியுள்ளது இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துள்ளது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கேட்கிறார்கள். அதைபன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொழுது அவரே செய்திருக்க முடியுமே?

இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.