நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புழல் சிறையில் இருந்தபடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்: தேனி மாவட்டத்தில், கேரள எல்லைக்கு அருகில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடம், இடுக்கி, முல்லைப் பெரியாறு ஆகிய இரண்டு அணைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பல நீராதாரங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தத் திட்டத்தைத் தொடக்கத்தில் இருந்து எதிர்த்தார்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திட்டத்தைச் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட அரிய காட்டு விலங்குகள் வசிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்குக் கேரள அரசின் தடை இல்லாச் சான்றிதழைப் பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை, உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு கேரள அரசின் வனத் துறை தடை இல்லாச் சான்றிதழ் வழங்குவதைத் தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


