டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முதலில் எதிர்ப்பு; இப்போது ஆதரவா? 'நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

'நீட்' தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இப்போது ஆதரவளிப்பது ஏன் என்று  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:23 pm

DIN

சென்னை: 'நீட்' தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இப்போது ஆதரவளிப்பது ஏன் என்று  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய மருத்துவ சபையின் (எம்.சி.ஐ) விதிகளின்படியே நடைபெற வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் குழுவானது உயர் நீதிமன்ற அமர்வின் முன் மேல்முறையிடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

'நீட்' தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இப்போது ஆதரவளிப்பது ஏன்? மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்கிறதா? நீட் தேர்வு மதிப்பெண்தான் சேர்க்கைக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கபடுகிறதே? இது தொடர்பாக இந்திய மருத்துவ சபையின் (எம்.சி.ஐ) விதிகள் என்ன சொல்கிறது?

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு கேள்விகளை எழுப்பியது. பின்னர் இந்த விவாகாரம் தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ சபையும் நாளை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.