சர்க்கரை நோய் பாதித்த ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுத்தது ஏன்? பொன்னையன் அடுக்கிய கேள்விகள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டது ஏன்? என்று பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்க்கரை நோய் பாதித்த ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுத்தது ஏன்? பொன்னையன் அடுக்கிய கேள்விகள்


சென்னை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டது ஏன்? என்று பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லி போலீசாரால் டிடிவி தினகரன் கைதான நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பொன்னையன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து புலனாய்வு செய்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் போதே அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் பொன்னையன் கூறினார்.

டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, லஞ்சம் கொடுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கே தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, போயஸ்கார்டனில் இருந்தே தினகரன் விரட்டப்பட்டார். மன்னார்குடி குடும்பத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள்தான் தற்போது தமிழகத்தை ஆள்கிறார்கள் என்று பொன்னையன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com