மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

2 ஜி அலைக்கற்றை வழக்கு: உயர்நீதிமன்ற வரம்புக்குள் வருமா?- நீதிபதிகள் கேள்வி

2 ஜி- அலைக்கற்றை வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வருமா என்பதை உச்சநீதிமன்றத்திடம்

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 3:16 am

DIN

சென்னை: 2ஜி அலைக்கற்றை வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வருமா என்பதை உச்சநீதிமன்றத்திடம் கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்குரைஞர்களை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்க பிரிவு சார்பில், சென்னை நந்தனத்தில் இயங்கி வந்த அட்வான்டேஜ் ஸ்டேட்டஜிக் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிட்டெட் (Advantage Strategic Consulting Private Limited) என்ற நிறுவனம் உள்பட ஒரு சில நிறுவனங்களுக்கு சம்மன் மற்றும் சோதனை நடத்துவதற்கான நோட்டீஸ் அனுப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி, ஏற்கெனவே தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அட்வான்டேஜ் ஸ்டேட்டஜிக் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் உள்பட பலர் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறபித்த உத்தரவு வருமாறு: 2 ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்தார்.
எனவே, இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு இந்த உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த வழக்கைக் காரணம் காட்டித்தான் ஏற்கெனவே இந்த வழக்கில் சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்தார். ஆகையால், மனுதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என, மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அது தொடர்பாக அவ்வவ்போது அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற வரம்புக்குள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அமலாக்கத்துறை சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவரும், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலனும்  உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.