கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களை அரசுடைமையாக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களை அரசுடைமையாக்க வேண்டும்


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சொத்துக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
தமிழக காங்கிரசுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி சொத்துக்களை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அமைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்துள்ள காவலாளி கொலை மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. எனவே, கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்ததா? உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மத்திய அரசிடம் தேவையான நிதியுதவியை பெற்று போர்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்றார்.
தமிழக அரசை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் மத்திய அரசிடம் உள்ளது. பாஜகவின் திருவிளையாடல் சதி திட்டத்தால் அதிமுக உடைந்து அமைச்சர்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்கிறார்கள். தேர்தலில் மூலம் ஆட்சிக்கு வரமுடியாத பாஜக கொல்லைபுறம் வழியாக நுழைய முயற்சி செய்கிறது. ஆனால், ஒரு போதும் அவர்கள் முயற்சி பலிக்க போவது இல்லை.
மேலும், தினகரன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று கூறிய திருநாவுக்கரசர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...