ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒசூரில் கடும் வெயிலால் கார் தீப்பற்றி எரிந்தது

ஒசூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலில் நின்றிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image
Updated On :29 ஏப்ரல் 2017, 3:01 am

DIN

ஒசூர்: ஒசூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலில் நின்றிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கும்பாரபேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென இந்த கார் தீப்பற்றி எரிந்தது.

தகவலின் பேரில், உடன் வந்த தீயணைப்பு வீரர்கள் முருகன், பன்னீர்செல்வம், மகேந்திரன், ராஜா ஆகியோர் தீயை அணைத்து, அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

 இந்த காருக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்ததா? அல்லது மின் கசிவால் தீப்பற்றியதா என்றும், கார் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் ஒசூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.