காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்: தமிழக அரசுக்கு எதிராக களம் காணும் ஓபிஎஸ்!

பொதுமக்களின் பிரச்சினைகளில் மெத்தனம் காட்டும் தமிழக அரசினைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின்... 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 10:36 am

DIN

சென்னை: பொதுமக்களின் பிரச்சினைகளில் மெத்தனம் காட்டும் தமிழக அரசினைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் நிகழும் உட்கட்சிப் பூசலில் இரு அணிகளும் உடனே இணைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் இனி இணைப்பதற்கான பேச்சு வார்தை பற்றிப் பேசுவதாக இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருந்தார்.

அத்துடன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும்  அவர் தற்பொழுது இறங்கியுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக சென்னையில் தற்பொழுது அந்த அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதே நேரம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் நாளை சென்னையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடுத்த கட்டமாக பொதுமக்களின் பிரச்சினைகளில் மெத்தனம் காட்டும் தமிழக அரசினைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்ச்சல்,  'நீட்' தேர்வு அனுமதி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க கோரி வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்துக்கு, ஓ .பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.