ஊழலை பற்றிப் பேச ஓபிஎஸ்ஸுக்கு தகுதி இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேச பேட்டி!
ஊழலை பற்றிப் பேச ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


சென்னை: ஊழலை பற்றிப் பேச ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிகழும் உட்கட்சிப் பூசலில் இரு அணிகளும் உடனே இணைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் இனி இணைப்பதற்கான பேச்சு வார்தை பற்றி பேசுவதாக இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருந்தார். அத்துடன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அவர் தற்பொழுது இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தடித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
ஊழலை பற்றிப் பேச ஓபிஎஸ்ஸுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் முதலில் தன் முதுகில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...