குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்: தமிழக அரசை சாடும் கமல்! 

குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்; முதலில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசுங்கள் என்று நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசினை கமல் சாடியுள்ளார்.
குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்: தமிழக அரசை சாடும் கமல்! 

சென்னை: குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்; முதலில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசுங்கள் என்று நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசினை கமல் சாடியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எனவே நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்த அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும் என்றும்,  நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் இன்று இரவு தில்லி செல்கின்றனர். அவசர சட்ட வரைவுக்கு நாளை மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் எனத்  தெரிகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு அனுமதி விவகாரம் குறித்து நடிகர் கமலஹாசன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவலாவது:

குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்; நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு மத்திய அரசு அனுமதி தனது விடுமாம். இது மாணவர்களின் எதிர்காலம் குறித்த விவகாரம். எனவே இது குறித்து பேசுங்கள்.

இவ்வாறு கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com