அதிமுக தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம்
தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், ஆட்சி எனும் கண்ணாடிப் பாத்திரத்தை கவனமாக


தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், ஆட்சி எனும் கண்ணாடிப் பாத்திரத்தை கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும், தவறினால் சிதறிவிடும் எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக, சென்னை எழும்பூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
ஒரு சிலர் கட்சித் தலைமை அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அதுதான் உண்மை எனக் கூறுகிறார்கள். அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதற்கும், கட்சியை கொல்லைப்புறமாக கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்திலும் சில அமைச்சர்களும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
சரியான வழிக்கு வாருங்கள்: தவறான செயல்களை விட்டுவிட்டு அவர்கள் சரியான வழியில் வர வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் அவர்களுக்கு ஆபத்து.
அமைச்சருக்கு பதில்: திருடனே திருடி விட்டு, திருடன் திருடன் என கூப்பாடு போடுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார். யார் திருடன் என்பது மக்களுக்கும், கட்சியினருக்கும் நன்றாகத் தெரியும். மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்பதற்காக சில எம்.எல்.ஏ.,க்கள் தடுக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர். கூட்டத்துக்குச் சென்றால் தொகுதிகளுக்கு எந்தத் திட்டங்களுக்கும் தரமாட்டோம் என்று அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
திடீர் பயம் காரணம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை என்னுடன் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு, திடீரென ஏன் பயம் வந்ததென்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் நின்றபோது அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். நிதியமைச்சர் பதவியையும், மீனவர் செயலாளர் பதவியை பெற்றார். ஓ.பி.எஸ்., என்னதான் உதறினாலும் அவரது காலில் விழுந்து ஒன்றாகிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
கட்சித் தொண்டர்கள்: யார் ஒன்றானாலும், தொண்டர்களின் எண்ணம் என்ன என்பது மேலூர் பொதுக்கூட்டத்திலேயே தெரிந்திருக்கும். அவர்களது எண்ணத்தை நிறைவேற்றுவோம். அதுவே எங்களுக்கு வேதவாக்கு. அதுதான் எங்களது முதல் கடமை.
கட்சியைக் காப்பாற்ற வேண்டும். கட்சி இருந்தால்தான் ஆட்சி இருக்கும். ஆட்சியை சரியாக நடத்த வேண்டும். ஆட்சி என்பது கையில் இருக்கும் கண்ணாடிப் பாத்திரம் போன்றது. கவனமாக வைத்திருக்க வேண்டும். சிதறினால் நாங்கள் பொறுப்பல்ல. யாரையோ திருப்திப்படுத்த அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் டிடிவி தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...