ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

யார் இணைந்தால் என்ன? நாங்கள்தான் உண்மையான கட்சி!  டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் அறைகூவல்!

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தொண்டர் பலம் உள்ள நாங்கள்தான் உண்மையான கட்சி என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2017, 12:59 pm

DIN

ராயப்பேட்டை: அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தொண்டர் பலம் உள்ள நாங்கள்தான் உண்மையான கட்சி என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை அவர் இன்று சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

வருகின்ற 23-ஆம் தேதி வட சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் இல்லை.அதனைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை.  அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் தொண்டர் பலம் உள்ள நாங்கள்தான் உண்மையான கட்சி. அதனை நீங்கள் மதுரை மேலூர் கூட்டத்தில் பார்த்தீர்கள்.  அதனை விரைவில் வட சென்னையிலும் பார்ப்பீர்கள்.

இரு அணிகள் இணைந்த பின்னர் கட்சியின் பெயர்  மற்றும் சின்னம் மீட்டெடுப்பு குறித்த விவகாரங்களை பார்க்கலாம்.

இவ்வாறு வெற்றிவேல் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.