

சென்னை: போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கி உள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வேதா இல்லத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று வருவாய் துறை அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக்கும் பணிக்கான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.