மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சசிகலாவை நீக்கினால் மட்டுமே... ஓபிஎஸ் அணியின் நிபந்தனையும், இபிஎஸ் அணியின் தயக்கமும்

அதிமுகவின் இரு அணிகளும் இதோ இணைந்து விடும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், பேச்சுவார்த்தையில் திடீரென இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2017, 7:10 am

DIN


சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இதோ இணைந்து விடும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், பேச்சுவார்த்தையில் திடீரென இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அதிமுகவின் இரு அணிகளும் இன்று நண்பகல் 12 மணியளவில் இணையும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இன்று காலை முதலே இரு தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

அணிகள் இணைப்பை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியானப் பிறகு தான், தங்கள் அணி தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அதிமுகவின் பொதுச் செயலர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதற்கு பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாகவும் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் இழுபறி நிலையை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதற்கேற்றாற்போல 12.30 மணிக்கே இரு அணிகளும் இணைந்துவிடுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை எந்த தரப்பினருமே அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இரு அணி இணைப்பு குறித்து இதுவரை வேறு எந்த தகவலும் கிடைக்காததால், அதிமுக தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.