/

இபிஎஸ் பதவியை விட்டு விலகினால் மட்டுமே பேச்சுவார்த்தை: தங்கதமிழ்ச்செல்வன்

இபிஎஸ் பதவியை விட்டு விலகினால் மட்டுமே எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

தினமணி

இபிஎஸ் பதவியை விட்டு விலகினால் மட்டுமே எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுவை தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் முக்கிய நோக்கமே கட்சியை ஒருமைப்படுத்த வேண்டும், கட்சியை பிளவு படுத்த கூடாது என்பதாகும். பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்க வேண்டும் என்று இபிஎஸ் கூறியதால் தான் நாங்கள் இங்கே வந்து இருக்கிறோம்.

ஆளுநர் 7 நாட்களுக்குள் அழைக்க வேண்டும். இதில் தற்போது 5 நாட்கள் முடிந்து விட்டது.  அவர் அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் குடியரசுத் தலைவரை சந்திப்போம்.

தமிழகத்தில் ஆட்சி இருப்பதால் எதுவும் நடக்கலாம். அதனால் தான் பாதுகாப்பாக நாங்கள் இங்கு வந்து தங்கி இருக்கீறாம். 20 பேராக நாங்கள் உள்ள நிலையில் எங்களை பயமுறுத்தி பார்க்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முதல்வர் இபிஎஸ் பதவி விலக வேண்டும், துணைப் பொதுச்செயலாளர் தினகரனை ஏற்க வேண்டும், பொதுச் செயலாளர் சசிகலாவை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளில் உறுதியாக உள்ளோம் என்றார்.

மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ
உடனிருந்த மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. கூறியதாவது:
பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்க முடியாது. எங்கள் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் அப்போது எதிர்ப்பு தெரிவிப்பர். இபிஎஸ் தற்போது பதிவை விட்டு விலக வேண்டும் என்றார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.