/

முதல்வரும், தினகரனும் விரைவில் சேர வாய்ப்பு: கு. பரசுராமன் எம்பி 

முதல்வரும், தினகரனும் விரைவில் சேர வாய்ப்புள்ளது என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN

முதல்வரும், தினகரனும் விரைவில் சேர வாய்ப்புள்ளது என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தமிழக முதல்வரும், தினகரனும் விரைவில் சுமூகமாகப் பேசி முடிவெடுப்பர். எனவே, அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற வாய்ப்பு மிகவும் குறைவு. அதிமுகவில் எந்தக் கருத்து வேறுபாடும் இருந்தாலும், விரைவில் ஒன்று சேருவர்.

கழகத்தில் சின்ன, சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். அண்ணன் - தம்பிகள் அடித்துக் கொண்டு, அடுத்த நாளில் சேர்ந்து கொள்வதுபோல அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதைக் களைந்து ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் பிரச்னை குறித்தும், காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது எனவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். பயிர்க் காப்பீடுக்கான பிரிமிய தொகை செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும் என்றார் பரசுராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.