நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் தங்கமணி நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான தங்கமணியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.


நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான தங்கமணியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான தங்கமணி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட புதிய செயலாளராக எஸ். அன்பழகன் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது புதியதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ். அன்பழகன் ஏற்கனவே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்பி ஆக பதவி வகித்துள்ளார். நாமக்கல் தனி தொகுதியாக இருந்தபோது, போட்டியிட்டு எம்எல்ஏ ஆக தேர்வானவர். மேலும் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
முன்னதாக டிடிவி தினகரன் நேற்று முதல்வர் பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...