டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் கோரிக்கை மனு!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் சட்டப்பேரவை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் சட்டப்பேரவை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையினை இழந்து விட்டதாக கூறி, பேரவையினை கூட்டி அரசின் பெரும்பாமையினை நிரூபிக்க சொல்ல வேண்டுமென்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்களில், தங்க தமிழ்செல்வன், ஏழுமலை மற்றும் வெற்றிவேல் ஆகிய மூவரும் இன்று மாலை தலைமைச் செயலகம் வந்தனர். முன்னதாக தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் பேரவைச் செயலரை அவர்கள் மூவரும் சந்தித்தனர். அப்பொழுது முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததன் காரணமாக, சபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்டீஸ் தொடர்பாக விளக்கம் கோரி, அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...