தமிழக ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் திடீர் சந்திப்பு
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநருடன் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர்.


சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநருடன் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 4 தலைவர்களும் இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.
ஆளுநர் மாளிகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த தலைவர்கள், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று 4 வலியுறுத்தினர்.
ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிடக் கோரியிருந்த நிலையில், இன்று மேலும் 4 அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...