சென்னை: வாசகசாலை இலக்கிய அமைப்பின் தமிழ் இலக்கிய விருதுகள்- 2017 அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும், வாசகசாலை இலக்கிய அமைப்பானது தனது மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், தமிழ் இலக்கிய விருதுகள்- 2017 அறிவிப்பினை வெளியிட்டது.
அதற்கென வந்து சேர்ந்த படைப்புகளில் இருந்து ஐந்து பிரிவுகளில் விருதுக்கான படைப்புகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
சிறந்த நாவல்: ஒற்றைப் பல் - கரன் கார்க்கி
சிறந்த சிறுகதைத் தொகுப்பு: கேசம் - நரன்
சிறந்த கவிதைத் தொகுப்பு: யுகங்களின் புளிப்பு நாவுகள் - மு.ஆனந்தன்
சிறந்த கட்டுரைத் தொகுப்பு: பாதுகாக்கப்பட்ட துயரம் - களந்தை பீர் முகம்மது
சிறந்த அறிமுக எழுத்தாளர்: சுரேஷ் பிரதீப் (ஒளிர் நிழல் & நாயகிகள் நாயகர்கள்)
இந்த விருதுகள் நாளை (23.12.17) நடக்கும் வாசகசாலையின் "முப்பெரும் விழாவில்" வழங்கப்படும். விழாவானது சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வினோபா அரங்கில் மாலை 3 மணிக்குத் துவங்கும்.
நிகழ்வில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.
தொடர்புக்கு: 9942633833 & 9790443979.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


