கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குமரியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் பணி 2018இல் தொடங்கும்: துறைமுக அதிகாரி

கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையத்துக்கான பணிகள் 2018இல் தொடங்கும் என தென்தாமரைகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற திட்ட விளக்கக் கூட்டத்தில் துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:15 am

தினமணி

கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையத்துக்கான பணிகள் 2018இல் தொடங்கும் என தென்தாமரைகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற திட்ட விளக்கக் கூட்டத்தில் துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

கன்னியாகுமரி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முனையத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கூட்டம் தென்தாமரைகுளம் தாமரை சக்தி மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித் தலைமை வகித்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக திட்ட அதிகாரி ஜெயக்குமார், துறைமுக செயற்பொறியாளர்கள் பெபின், கார்த்திகேயன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ்,  சிவராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், தென்தாமரைகுளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு, இலந்தையடிவிளை, கோயில்விளை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். மக்களின் சந்தேகங்களுக்கு துறைமுக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அப்போது, துறைமுகத் திட்ட அதிகாரி ஜெயக்குமார் கூறியது: குமரி பகுதியில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் நிலப்பகுதி மட்டுமன்றி ஒரு வீடு கூட பாதிக்கப்படாமல் அமையவுள்ளது. கடற்கரையில் இருந்து நிலப்பரப்பில் 100 மீட்டர், கடலின் உள்புறத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முனையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் வரைபட அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த அனுமதி கிடைக்கப் பெற்றதும் அடுத்தாண்டு (2018) முதல் பணிகள் முழுவீச்சில்  தொடங்கப்பட்டு படிபடியாக 3 கட்டங்களாக பணிகள் நடைபெறும்.

தற்போது நமது நாட்டின் சரக்குகள், இலங்கை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், நாட்டுக்கு ரூ.1,500 கோடி  வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

இந்த வர்த்தக முனையம் அமையும்பட்சத்தில் நாட்டின் வருவாய் இழப்பு தடுக்கப்படும். இந்தப் பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு நல்ல தொழில்வாய்ப்பு ஏற்படும். இத்துறைமுகத்துக்காக 100 மீட்டர் அகல சாலை 3 கி.மீ. தொலைவில் உருவாக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும் என்றார் அவர்.

தொடர்ந்து, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு துறைமுக அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் விளக்கமளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.