வன அவசரச் சட்டம்: தமிழக எம்.பிக்களின் ஆதரவும், எதிர்ப்பும்
இந்திய வனச் சட்டம், வன அவசரச் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் தமிழக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அஇஅதிமுக), திருச்சி சிவா (திமுக),


இந்திய வனச் சட்டம், வன அவசரச் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் தமிழக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அஇஅதிமுக), திருச்சி சிவா (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரின் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் தெரிவித்தனர்.
இதன் விவரம் வருமாறு:
ஏ.நவநீதகிருஷ்ணன்
(அஇஅதிமுக): கிராமப்புறங்களில் ஏழை மக்களால், கிராமப்புற பயன்பாட்டுக்காக மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. இவை கிராமப்புற மக்களின் சொத்தாகவும் உள்ளன. மூங்கில் மரங்களை வெட்டுவதற்கும், அனுப்புவதற்கும் வனத் துறையின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால், அதில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரம் புறக்கணிக்கப்படுவதால், ஏழை மக்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழலில், இந்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதை வரவேற்கிறேன்.
எதிர்ப்பு...
திருச்சி சிவா (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) : அவசரகாலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர அரசுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டிய அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? சட்டத் திருத்தமும், அவசரச் சட்டமும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவுகள் ஆகும். நாடாளுமன்ற செயல்முறைகளை பயன்படுத்தாமல் ஏன் அவசரச் சட்ட வழியை அரசு தேர்ந்தெடுக்க வேண்டும்?
'இந்த விவகாரத்தில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மூங்கில் வளர்ப்பில் மக்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கும் போது, வனத்தில் மூங்கில்களை வளர்க்கவும், விற்கவும் வனத் துறையினர் சட்டவிரோதமாக தடை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனத்துக்கு வெளியில் வளர்க்கப்படும் மூங்கில்கள், மரமாக கருதப்படாது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பது தனியார் நில உரிமையாளர்களுக்கு பயனளிக்கவா? இந்த மசோதா பழங்குடியினரின் மீது அக்கறை காட்டவில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...