மாரத்தான் யோகா: சென்னை பெண் கின்னஸ் சாதனை!
தொடர்ந்து யோகா செய்து சென்னையைச் சேர்ந்த பெண் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் கவிதா பரணிதரன். மூன்றரை வயது குழந்தைக்கு தாயான இவர் தற்போது யோகா செய்வதில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
டிசம்பர் 23-ந் தேதி காலை 7 மணியளவில் இவருடைய மாரத்தான் (தொடர்ச்சியாக ஒரு செயலைச் செய்வது) யோகா தொடங்கியது. இதன்மூலம் 5-ஆம் நாளான டிசம்பர் 28-ந் தேதி (இன்று) பிற்பகல் 02:02 மணியளவில் இவர் முந்தைய மாரத்தான் யோகா கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மாரத்தான் யோகாவில் ஈடுபட்டு வரும் கவிதா, டிசம்பர் 30-ந் தேதி வரை இதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், உலகளவில் நீண்ட நேரம் மாரத்தான் யோகா முயற்சியில் ஈடுபட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
முன்னதாக, நாசிக்கைச் சேர்ந்த பிரதன்யா பாட்டீல், இதே வருடம் ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிய மொத்தம் 103 மணிநேரங்கள் தொடர்ந்து மாரத்தான் யோகா செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

