இடைத் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் விசாரணைக் குழு கலைப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக அதன் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக அதன் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் சார்பில் ஆர்.தாமோதரன்
தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சு.திருநாவுக்கரசர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து என்னிடம் நேரில் தேர்தல் தொடர்பான கட்சியின் செயல்பாடுகளைத் தெரிவித்தனர். இதனால், தாமோதரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு தற்போது அவசியம் இல்லாததால், இந்தக் குழு ரத்து செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட மற்றொரு அறிக்கை:- அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...