நடிகர் ரஜினிகாந்தை கட்சி தொடங்கும்படி யாரும் வலியுறுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் 133-ஆம் ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்திபவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரம்பம் காலம் முதல் காங்கிரஸை வளர்த்த தலைவர்களின் படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் கொடியை சு.திருநாவுக்கரசர் ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
அலைக்கற்றை வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது.
இந்த வழக்கின் மீதே பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்போது அலைக்கற்றை வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். அவர்களின் கட்சிக்குள் நடைபெறும் பிரச்னை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.
பாஜகவை அதிமுக துணிச்சலுடன் எதிர்க்கும் என்று சொல்ல முடியாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரக் கூடாது.
எனக்கு ரஜினிகாந்த் 30 ஆண்டுகால நண்பர். டிசம்பர் 31-இல் அரசியல் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார். அவரை கட்சி தொடங்கும்படி யாரும் வலியுறுத்த முடியாது என்றார்.
முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

செங்கம் ஆவின் அலுவலகம் முன் பால் முகவா்கள் முற்றுகைப் போராட்டம்

வாரச் சந்தையில் த.வெ.க.வினா் பிரசாரம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

