ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்! 

மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:59 pm IST

சென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலவேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு விதமாக எதிர்வினை புரிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லா விதமான ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இங்கு மட்டும்தான் சொல்வார்கள். உலகிற்கே ஆளும் முறையை சொல்லிக் கொடுத்த பெருமை வாய்ந்த பாரம்பரியம் உடையவர்கள் நாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் யாரும் தகுதி இல்லாதவர்களா? ஒருவரும் இங்கு இல்லையா?

காவிரிப் பிரச்னையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களே? இப்போது அரசியல் பேசுபவர் அப்போது எங்கே போனார்? பொதுச் சொத்துக்களும் பேருத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போதெல்லாம் ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள் என்று யாருமே கேட்கவில்லையே ஏன்?

எனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது? மக்களிடம் கொண்டு செல்ல? ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு என்று பொருள்.  எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் தெளிவாக சொல்ல வேண்டும்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.