சென்னை: சொந்த காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராக வரும் 7-ம்தேதி அல்லது 9-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குவழி விடும் வகையில் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சொந்த காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


