சென்னை: பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் பன்னீர்ச்செல்வத்தை கட்டயாப்படுத்தி கையெழுத்து வாங்கப்படவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
ராஜினாமா கடிதத்தில் தன்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது ஆதராமில்லாத குற்றசாட்டு. அவருக்கு கட்டாயம் எதுவும் இல்லை,. மேலும் அவரை மீறி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில்தான் விடுதிகளில் தங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் 10 அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து இன்று இரவு ஆளுநரை சந்திக்க உள்ளனர். அப்பொழுது தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறையிடுவோம். சசிகலா தலைமையில் ஆட்சி அமையும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


