சென்னை: திமுக கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து, கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
திமுக பொதுக் குழுக் கூட்டத்தில், செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தற்போது செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். விதியின்படி தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு. இந்த தீர்மானத்தை க. அன்பழகன் முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார்.
மேலும் திமுக பொருளாளர் பதவியிலும் ஸ்டாலின் தொடர்ந்து நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது. செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


